வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.. வெறிச்சோடிய கோவில்பட்டி...

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.. வெறிச்சோடிய கோவில்பட்டி...
X

கோவில்பட்டியில் வியாபாரிகள் போராட்டத்தால் அடைக்கப்பட்டுள்ள கடைகள்.

கோவில்பட்டியில் தினசரி சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை 6.87 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்தநிலையில் அங்கு செயல்பட்டு வரும் தினசரி சந்தைதை இடமாற்றம் செய்வது தொடர்பாகவும் கூடுதல் பேருந்து நிலையத்தில் தற்காலிக கடைகள் அமைக்க குலுக்கல் முறையில் கடைகள் தேர்வு செய்யபடுவது தொடர்பாகவும் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இடமாற்றம் மற்றும் புதிய கட்டுமானம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விரிவடைந்த நகராட்சி கூடுதல் தினசரி சந்தை உருவாக்கிட வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கடைகள் புதிய கட்டுமானத்திற்கு பிறகும் அக்கடைகளை அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தினர்.


ஆனால், வியாபாரிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அந்தக் கூட்டத்தை பெரும்பாலான வியாபாரி சங்கங்கள் புறக்கணித்த நிலையில், இடமாற்றம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவில்பட்டியில் தற்போது கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர் .

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கம், தொழில் வர்த்தக சங்கம், நகை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கோவில்பட்டி நகர் பகுதி முழுவதும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.


இதற்கிடையே, கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தைக்குள் போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட பந்தலை காவல்துறை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் பந்தல் அமைக்க கூடாது, அகற்ற வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். அதற்கு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விவசாயிகளிடம் காவல் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!