கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்
X

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இருப்பினும், இந்த கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவாக ஐப்பசிப் பெருந்திருவிழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்குப் பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயில் கொடியேற்ற நிகழ்ச்சியில், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜ குரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, ரவீந்திரன், சண்முகராஜ் நித்தியலட்சுமி, கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 9 ஆம் தேதி வரை 12 நாட்கள் தினமும் காலை மற்றும் மாலை என சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9 ஆம் திருவிழாவான நவம்பர் 6 ஆம் தேதி திருத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.

தொடர்ந்து, நவம்பர் 8 ஆம் தேதி அம்பாள் தவசு மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐப்பசி திருக்கல்யாணம் நவம்பர் 9 ஆம் தேதியும் நடைபெறகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!