Kovilpatti Amman Temple Chariot கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி தேரோட்டம்
செண்பகவள்ளி அம்மன் தேரினை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ வடம் பிடித்து இழுத்தார். அருகில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள்.
Kovilpatti Amman Temple Chariot
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள செண்பகவல்லியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை அடுத்து நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனம் மற்றும் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று மிக வெகு விமர்சையாக நடைபெற்றது.
Kovilpatti Amman Temple Chariot
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவள்ளி அம்மன் தேரோட்டம் நடந்தது.
முன்னதாக காலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய திருத்தேரோட்டத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, செயல் அலுவலர் வெள்ளைசாமி, தொழிலதிபர் வெங்கடேஷ், நகரச் செயலாளர் விஜய பாண்டியன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள், திரளானோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் அம்மாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பத்தாம் திருவிழாவான நாளை அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதலும், 11 ஆம் நாள் திருவிழா மதியம் அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சிவும் 12 திருவிழா காலை அம்பாள் பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu