வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாளையொட்டி கனிமொழி எம்.பி. நலத்திட்ட உதவி

வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாளையொட்டி கனிமொழி எம்.பி. நலத்திட்ட உதவி
X

ஒட்டப்பிடாரத்தில் கனிமொழி எம்.பி. வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் எம்.பி. கனிமொழி நலத்திட்ட உதவி வழங்கினார்.

வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியிலுள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதனை தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மேலும் அரசு சார்பில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் 207 பயனாளிகளுக்கு 21 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் நலதிட்ட உதவிகளை கனிமொழி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் கண்ணபிரான், மற்றும் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள். தி,மு,க, உள்பட அனைத்து அமைப்பினர் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர் .

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!