கோவில்பட்டியில் கம்பன் விழா போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு

கோவில்பட்டியில் கம்பன் விழா போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு
X

கோவில்பட்டியில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்றோர்.

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கோவில்பட்டி கம்பன் கழகத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு கம்பன் விழா ஆர்த்தி மஹாலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. விழாவில், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், கருத்தரங்கம், இளையோர் அரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி கம்பன் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். அபிராமி முருகன், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டாக்டர் கோமதி, தலைமையாசிரியை மணிமதி, புனித ஓம் லட்சுமணப் பெருமாள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். முதல் நிகழ்வாக இலக்கியசுடர் ராமலிங்கம் தலைமையில் கம்பன் தமிழில் காவிய மைல்கள் என்ற தலைப்பில் வீர பாலாஜி, பாரதி, அறிவொளி ஆகியோர் உரையாற்றினர்.


இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக மாறுவேட போட்டி, செய்யுள் ஒப்பிவித்தல், பேச்சு, இசை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இரண்டாவது நிகழ்வாக சொற்சுடர் பாலகிருஷ்ணன் தலைமையில் கம்பனில் சுவைகள் என்ற தலைப்பில் ராஜ தர்ஷினி, சுபத்ரா, வெங்கடேஷ், தீபக்,ஸ்ரீநிதி ஆகியோர் உரையாற்றினர்.

மூன்றாவது நிகழ்வாக மூத்த மருத்துவர் சீனிவாசன் தலைமையில் அரிமா மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்ற பிரான்சிஸ் ரவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நான்காவது நிகழ்வாக இலக்கிய செல்வர் மாது தலைமையில் கம்பனின் புகழுக்கு பெரிதும் காரணம் கற்பனைச் சிறப்பே என்ற தலைப்பில் முருகேசன், விமல், ராஜ்குமார், பாத்திரப் படைப்பே என்ற தலைப்பில் சிதம்பரம், ஜோதி ரவி, பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசிய பட்டிமன்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கம்பன் கழக நிர்வாகிகள் சரவண செல்வன், விநாயக சுந்தரி, ராஜாமணி, சுனையரசன், பெரியசாமி பாண்டியன், மதிவாணன், ராதா, மனோகர், கிருஷ்ணன், வினோத் கண்ணன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் பாபு, பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம், மருத்துவர்கள் லதா பாரதி மோகன், செல்வராஜ், பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!