கோவில்பட்டியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கோவில்பட்டியில் காமராஜர் படத்துடன் கூடிய மாஸ்க் அணிந்து பேரணியாக சென்ற மாணவ, மாணவிகள்.
பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது இதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், காமராஜரின் படத்துடன் கூடிய மாஸ்க் அணிந்து 121 மாணவர்களும், 121 மாணவர்கள் கையில் தேசிய கொடி ஏந்தியும், சாரண இயக்க மாணவர்களும் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
பின்னர், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளி வளாகத்தில் காமராஜரின் பிறந்த தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், காமராஜர் புத்தகமும் வழங்கப்பட்டது. 121 மாணவர்களுக்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனி செல்வம் சார்பில் சீருடை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயபாலன், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் பிறந்த தின ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளையும், சீருடைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர் ராஜேந்திர பிரசாத்,தொழிலதிபர் செல்வம்,பள்ளி கல்வி குழு உறுப்பினர்கள் மணிக்கொடி,ராஜா அமரேந்திரன்,பொன் ராமலிங்கம், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu