காமராஜர் நினைவு தினம்: கோவில்பட்டி தனியார் பள்ளியில் அகல் விளக்கு ஏற்றி மரியாதை

காமராஜர் நினைவு தினம்: கோவில்பட்டி தனியார் பள்ளியில் அகல் விளக்கு ஏற்றி மரியாதை
X

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி  மாணவ மாணவிகள் காமராஜரை ரங்கோலி ஓவியமாக வரைந்து 46 அகல் விளக்கு தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் இலக்கிய மன்றம் சார்பில் காமராஜரின் 46வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதல்வர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 46வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி இலக்கிய மன்ற மாணவ மாணவிகள் காமராஜரை ரங்கோலி ஓவியமாக வரைந்து அவரது ஓவியத்திற்கு 46 அகல் விளக்கு தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினர். மேலும் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே பழனிசெல்வம் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் கண்ணன், சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன், பள்ளி பொருளாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் செல்வி வரவேற்றார். நிகழ்ச்சியில், கலை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி பொருளாளர் ரத்தின ராஜா, ஐசிஎம் நடுநிலைப்பள்ளி உறுப்பினர் அந்தோணி பிரகாஷ், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியர் சாந்தினி நன்றி கூறினார்.

Tags

Next Story