கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறும். விழாவின் சிகரமான கருதப்படும் திருத்தேரோட்டம் வரும் 17ந்தேதி நடக்கிறது. 18ந்தேதி தீர்த்தவாரி, தபசு நிகழ்ச்சியும், 19ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கொடியேற்று நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu