ஜார்ஜ் பொன்னையாவை கள்ளிக்குடி போலீசார் கோவில்பட்டி டிஎஸ்பி இடம் ஒப்படைப்பு

பிரதமரையும் அமித்ஷாவையும் அவதூறாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கள்ளிக்குடி போலீசார் கோவில்பட்டி டிஎஸ்பி இடம் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கள்ளிக்குடி காவல் நிலையத்தில் இந்து மதத்தையும், பாரத பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக அரசையும் அவதூறாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்ய நடவடிக்கை எடுக்க எடுக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரியில் இருந்து காரில் தப்பிச் சென்றார். அவர் தப்பிச் சென்ற தகவலறிந்த கன்னியாகுமரி போலீசார் சென்னை செல்வதாக தகவல் அறிந்து அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக சிலைமான் போலீசார் தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் சிலைமான் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சென்னைக்கு சென்ற கார் ஒன்றை மடக்கிப் பிடித்த போலீசார் அதில் ஜார்ஜ் பொன்னையா இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து மதுரை விருதுநகர் எல்லைக்கு உட்பட்ட கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிலைமான் போலீசார் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் இடம் இன்று காலை ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து., விசாரணை மேற்கொண்டு அவரை கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியனிடம் ஒப்படைத்து அதைத்தொடர்ந்து அவரை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu