கோவில்பட்டியில் சர்வதேச புலிகள் தின விழா கொண்டாட்டம்

கோவில்பட்டியில் சர்வதேச புலிகள் தின விழா கொண்டாட்டம்
X

புலிகள் வாழ காடுகளை பாதுகாத்திட புலி வேடம் அணிந்த மாணவர்கள் உறுதியேற்றுக் கொண்டனர்.

கோவில்பட்டி ஐ சி எம் நடுநிலைப்பள்ளி சார்பில் சர்வதேச புலிகள் தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும் ஜூலை 29 ஆம் தேதி புலி இனங்களை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஐசிஎம் நடுநிலைப்பள்ளியில் நடந்த சர்வதேச புலிகள் தின விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புலி வேடம் அணிந்து பேரணியாக சென்றனர்.

புலிகள் வாழ்வதற்கு தேவையான வாழ்விடங்களை உருவாக்கிடவும், இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், புலி மற்றும் அனைத்து வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு உதவிடவும், புலிகள் வாழ காடுகளை பாதுகாத்திடவும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.


இந்த நிகழ்ச்சிக்கு ஐசிஎம் நடுநிலைப்பள்ளி செயலாளர் இன்ஜினியர் நடராஜன் தலைமை வகித்தார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை ராதா அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி வனச்சரக வனவர் பிரசன்னா கலந்து கொண்டு உலக புலிகள் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் சௌந்தர பாண்டியன், பள்ளி ஆசிரியர்கள் அபிலாதி ரேஸ், சுப்புலட்சுமி, பத்மாவதி, செல்லம்மாள் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture