கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
X

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங். கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்.கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி, கழுத்தில் கயிறு மாட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குற்றவாளி பேரறிவாளனக்கு பரோல் வழங்கியுள்ளது. அதனால் தமிழக அரசை கண்டித்து காங்.கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முன்னாள் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில், முன்னாள் ஒன்றிய தலைவர் செல்லத்துரை முன்னிலையில், எஸ்.சி.எஸ்.டி.பிரிவு நகர தலைவர் தாஸ் மற்றும் இளைஞர் பிரிவு கருப்பசாமி, ஆகியோர் தாலுகா அலுவலகம் முன்பு கண்களில் கறுப்புதுணி கட்டி, கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி பேரறிவாளன் பரோலை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.

அதன் பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை தலைமையிடத்து துணை வட்டாசியர் சுபாவிடம் வழங்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்