கோவில்பட்டியில் இந்திய அரசியலமைப்பு தின கருத்தரங்கம்

கோவில்பட்டியில் இந்திய அரசியலமைப்பு தின கருத்தரங்கம்
X

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு தின கருத்தரங்கில் உறுதிமொழி எடுத்துக் கொள்ள்பட்டது.

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதேபோல, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலும் அரசியலமைப்பு தின கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு மற்றும் இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் ஆகியவை சார்பில் இந்திய அரசியலமைப்பு தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. கரத்தரங்கிற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின் மற்றும் நிர்வாகி சுபேதார் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் செண்பகராஜன் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாவட்டத் துணைத் தலைவர் சம்பத்குமார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் மாணிக்கராஜ் ஆகியோர் அரசியலமைப்பு தினம் குறித்து கருத்துரை வழங்கினர். நிகழ்வில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவச்சிலை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டை பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், ஐஎன்டியுசி ராஜசேகரன், மக்கள் நீதிமய்யம் கட்சியின் ராதாகிருஷ்ணன், மேனாள் நூலக ஆய்வாளர் பூல்பாண்டியன், தர்மம் வெல்லும் அறக்கட்டளையின் பூலோகப்பாண்டியன், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கத்தின் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!