Income Tax Awareness Meet கோவில்பட்டியில் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்

Income Tax Awareness Meet  கோவில்பட்டியில் வருமான வரி  விழிப்புணர்வு கூட்டம்
X

கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் வருமான வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Income Tax Awareness Meet தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் வருமான வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Income Tax Awareness Meet

நாடு முழுவதும் மாத வருமானம் பெறுவோர் மற்றும் சொந்த தொழில் செய்வோர், வர்த்தக நிறுவனங்கள் நடத்துவோர் அரசுக்கு வருமான வரி செலுத்துவது வழக்கம். இருப்பினும், வருமான வரி செலுத்துவதில் இன்னும் சிலருக்கு சரியான புரிதல் இல்லாத நிலை இருந்து வருகிறது.

இதனால், ஆங்காங்கே வர்த்தக சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் சார்பில் வருமான வரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பட்டய கணக்காளர்கள் மற்றும் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வருமான வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் உள்ள தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருமான வரித்துறை உதவி ஆணையர் காசி சங்கர் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் அந்தந்த வருடத்திற்கு செலுத்தக்கூடிய முன் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் குறித்தும், self tax கட்டுவதாலும், தாமதமாக கட்டுவதாலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியின்போது, வருமான வரி அலுவலர்கள் செண்பகம், சிவபாலன் ஆகியோர் முன் செலுத்த வேண்டிய வருமான வரி குறித்து பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர்.

கூட்டத்தில் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் பாபு, செயலர் சந்திரசேகர், துணைச் செயலர் தெய்வேந்திரன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் விநாயகா ரமேஷ், ராதாகிருஷ்ணன், தெய்வேந்திரன், தணிக்கையாளர்கள், வருமான வரி செலுத்தும் தொழில் முனைவோர், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வனத் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியரின் உற்சாக பாராட்டு!