கோவில்பட்டி அருகே ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய பால்குட ஊர்வலம் துவக்கி வைப்பு

கோவில்பட்டி அருகே ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய பால்குட ஊர்வலம் துவக்கி வைப்பு
X

கோவில்பட்டி அருகே நடந்த பால் குட ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.

கோவில்பட்டி அருகே ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய பால்குட ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய தை முதல் செவ்வாய் காட்சி திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு மகா கணபதி ஹோமம் அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பால்குடம் ஜோதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

அதைதொடர்ந்து உம்மான் அன்னதான பூஜையும் இரவு 11 மணிக்கு அலங்கார பூஜையும் காட்சியும் ஆட்சியும் நடைபெறுகிறது அதிகாலை பொங்கல் வைத்தும் 10மணிக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்திருந்தனர். இவ்விழாவில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி,மாரியப்பன், ஆறுமுகம், திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி பூமாரி, காந்திமதி,ஊராட்சி ஒன்றிய துணைச் தலைவர் பழனிச்சாமி,ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், ஒன்றிய கவுன்சிலர் ராமர்,மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் போடு சாமி,உள்ளிட்ட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்