கோவில்பட்டியில் மடிப்பு நுண்ணோக்கி குறித்த செயல்முறை பயிற்சி

கோவில்பட்டியில் மடிப்பு நுண்ணோக்கி குறித்த செயல்முறை பயிற்சி
X

கோவில்பட்டியில் நடைபெற்ற மடிப்பு நுண்ணோக்கி செயல்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்றோர்.

கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் கிளப் சார்பில் மடிப்பு நுண்ணோக்கி செயல்முறை பயிற்சி கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டில் மலைவாழ் பகுதிகளில் வாழும் ஏராளமான குழந்தைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இறந்தனர். அந்த குழந்தைகளின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு மலைவாழ் பகுதிக்கு மைக்ரோஸ்கோப் கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மைக்ரோஸ்கோப் கருவிக்கு மாற்றாக எளிய முறையில் எடுத்து செல்லும் வகையில் மடிப்பு நுண்ணோக்கி தயார் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மனு பிரகாஷ், ஜிம்சைல் பிஸ்கி ஆகியோர் இணைந்து மடிப்பு நுண்ணோக்கியை தயார் செய்து பயன்படுத்தி வந்தனர்.

இதுகுறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் மடிப்பு நுண்ணோக்கி செயல்முறை பயிற்சி கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது.

அப்போது, மடிப்பு நுண்ணோக்கி தயார் செய்து பயன்படுத்தி அறிக்கை தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சொர்ணா நர்சிங் கல்லூரி முதல்வர் சாந்திபிரியா தலைமை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார்,முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் தமயந்தி அனைவரையும் வரவேற்றார்.


மதுரை ஈடன் கல்வியியல் கருத்துக்கூட இயக்குநர் பாண்டியராஜன் மடிப்பு நுண்ணோக்கி தயாரித்தல் மற்றும் செயல்படுத்துதல் குறித்து பயிற்சி அளித்தார். இதில், தமிழ்நாடு அஸ்ட்ரோ சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி,மேனாள் தாய்கோவங்கி மேலாளர் ராமசுப்பு,ஆசிரியை பாண்டிசெல்வி உள்பட நர்சிங் கல்லூரி மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் நுண் உயிரியியல் ஆசிரியை விநோதா நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!