எப்பா..கடை எப்ப தொறப்பியோ..? அடி மொட்டையை...!
மொட்டை போட்டுக்கொள்ளும் சிறுவன்.
உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல மாநிலங்கள் ஊரடங்கினை அமுல்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ந்தேதி முழு ஊரடங்கு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மட்டும் காலை 6மணி முதல் 12மணி செயல்பட அனுமதித்துள்ளது.
முழு ஊரடங்கில் சலூன் கடைகள் அனைத்தும் செயல்பட அரசு தடை விதித்துள்ளது. சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மட்டும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஊராட்சி பகுதிகளில் சலூன்கடைகள் இயங்கி வந்த நிலையில் இன்று முதல் 24ந்தேதி வரை சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இன்று முதல் சலூன்கள் செயல்படாது என்பதால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள சலூன் கடைகளில் நேற்று அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக சிறுவர்களுக்கு முடி வெட்டுவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர்.
இன்னும் 15 தினங்களுக்கு சலூன்கள் செயல்படாத என்பதால் பொது மக்கள் முடிதிருத்தம் செய்வதில் முனைப்பு காட்டினர். இதனால் சலூன் கடைகளில் வழக்கத்தினை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பல மணி நேரம் காத்திருந்து மக்கள் முடி வெட்டி சென்றனர். 24ந்தேதிக்கு மேல் ஊரடங்கு நீட்டிப்பு செய்யலாம் என்ற அச்சத்தில் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு மொட்டையும் அடித்து சென்றனர்.
இது குறித்து முடி திருத்தம் செய்ய வந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் கூறுகையில், குழந்தைகளுக்கு முடி வெட்டமால் விட்ட தற்பொழுது வெயில் தாக்கம் இருக்கும் என்பதால் சளி உள்ளிட்ட தொல்லைகள் அதிகமாக வர வாய்ப்பு இருக்கும் என்பதால் ஊரடங்கிற்கு முன்பாக முடி வெட்ட வந்துள்ளதாகவும், ஊரடங்கு 24ந்தேதிக்கு மேல் நீடிக்கலாம் என்ற அச்சம் இருப்பதால் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து உள்ளதாகவும், தெரிவித்தார்.
கடந்த ஆண்டும் இதே போன்று ஊரடங்கு போட்டதால் மிகவும் சிரமப்பட்டதாகவும், தற்பொழுது நாளை முதல் ஊரடங்கு தொடங்குவதால் இன்று அதிகமான மக்கள் முடித்திருத்தம் செய்ய வந்துள்ளதாகவும், ஊரடங்கு நீடிக்கலாம் என்று நினைத்து பலர் மொட்டை அடித்து செல்வதாகவும், ஏற்கனவே கடந்த ஆண்டு கடன் வாங்கி சமாளித்ததாகவும், அந்த கடனுக்கு தற்பொழுது வரை வட்டி தான் கட்டி வருகிறோம், மீண்டும் ஊரடங்கு என்பது தங்களை கடுமையாக பாதிக்கும் என்று கூறுகிறார் முடி திருத்தும் தொழிலாளி சண்முகராஜ்
ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் முடிதிருத்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பலர் குழந்தைகளுக்கு மொட்டையும் அடித்து வருகின்ற சூழ்நிலை கோவில்பட்டி பகுதியில் நிலவுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu