தமிழ்நாடு வடிவில் அணிவகுத்து நின்று அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்

தமிழ்நாடு வடிவில் அணிவகுத்து நின்று அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்
X

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு வடிவில் அணிவகுத்து நின்று அசத்தினர்.

தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் தமிழ்நாடு என அணிவகுத்து நின்று அரசுப் பள்ளி மாணவிகள் அசத்தினர்.

1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பின்பு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க ஆலோசிக்கப்பட்டது.1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டது.

அவரவர் மாநிலங்களுக்கு அவரவர் விரும்பிய பெயர்கள் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மதராஸ் என்ற பெயரே நீடித்தது.

மதராஸ் மாகாணம் தமிழ்நாடு எனும் பெயர் சூட்ட பல போராட்டங்கள் நடைபெற்றது. தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.

1957 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைக்க திமுக சட்டசபையில் கொண்டு தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தது. பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் தோல்வியில் முடிவுற்றது. 1967-இல் திமுக அரசு அமைந்த போது ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா பெரும்பான்மை ஆதரவுடன் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றினார்.

அதனைத் தொடர்ந்து 1968 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தினம் கொண்டாட அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு தினம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு வடிவில் நின்று அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், முன்னாள் ஓவிய ஆசிரியர் வேல்முருகன் உள்பட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story