இலக்கிய உலா, வணிக வைசிய சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா
கோவில்பட்டி இலக்கிய உலா, வணிக வைசிய சங்கம் இணைந்து நடத்திய காந்தி ஜெயந்தி விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலக்கிய உலா, வணிக வைசிய சங்கமும் இணைந்து மகாத்மா காந்தியின் 153 பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடின. இதையொட்டி, மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் நடந்த விழாவில், வணிக வைசிய சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ஆசியா பார்ம்ஸ் பாபு, இலக்கிய உலா ரவீந்தர், சுழற்கழகத்தின் சீனிவாசன், சமூக ஆர்வலர் வினோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனிதஓம் கல்வி நிறுவன தாளாளர் லெட்சுமணப்பெருமாள், சுழற்கழககத்தின் ரவிமாணிக்கம், பேராசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர், காந்தி ஜெயந்தி போட்டிகளில் கலந்துகொண்ட சுமார் 150 மாணவ மாணவியர்களுக்கு, சான்றிதழும் நூலும் பரிசளித்தனர்.
சிறப்பு விருந்தினராக சுழற்கழக விநாயகா ரமேஷ் கலந்து சிறப்பித்தார். "காந்தி ஒரு சகாப்தம்" என்ற தலைப்பில் முனைவர் முருக.சரஸ்வதி சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், விழாவை தொகுத்து வழங்கினார். மாணவ மாணவியர்களின் பாடல், பேச்சுப் போட்டி நடைபெற்றது. உரத்த சிந்தனை தலைவர் சிவானந்தம் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu