கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர், வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர், வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

கோவில்பட்டி லெனின் நகரில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் அவரது படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  

கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர், வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி லெனின் நகரில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா மற்றும் புகழ் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். செயலாளர் பெஞ்சமின் பிராங்களின், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் செல்லத்துரை, பகத்சிங் ரத்த தான கழக செயலாளர் காளிதாஸ், ராஜேஸ்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!