சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..
Azhagu Muthu Kone
Azhagu Muthu Kone-ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர் அழகுமுத்து கோனின் 313 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் மணிமண்டபம் தமிழக அரசால் நிறுவப்பட்டு அங்கு வீரர் அழகுமுத்துக்கோனின் முழு திருவுருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் அழகுமுத்து கோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரசு சார்பிலும் அரசியல் கட்சி தலைவர்கள் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு அழகுமுத்துக்கோனின் 313 வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞான தேவராவ், கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், அழகு முத்து கோனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், கருப்பசாமி, ஒன்றியக் குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மற்றும் திரளான திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல, மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவ சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அழகுமுத்து கோன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கட்டாலங்குளத்தில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை முன்னிட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu