Free Eye Camp At Kovilpatti கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாமை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
Free Eye Camp At Kovilpatti
கோவில்பட்டியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததானக் கழகம், தாமஸ்நகர் தொழிலாளர் விடுதலை முன்னணி, பி.எஸ். பால்ராஜ் பொதுசேவை அறக்கட்டளை, சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை ஏற்பாட்டில் தாமஸ்நகர் ஜெயம் கம்ப்யூட்டர் அலுவலகத்தில் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் ஈஸ்வரவளவன் தலைமை வகித்தார், செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். முகாமை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
விழாவில், புத்துயிர் ரத்ததானக் கழகத்தின் நிர்வாகி தமிழரசன், தொழிலதிபர் முத்துக்கனி, கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகி முனைவர் சம்பத்குமார், பால்ராஜ் பொதுச்சேவை அறக்கட்டளை சுப்பையா அம்பேத்கர், மதுஶ்ரீ இஞ்சினியரிங் முனியசாமி, தர்மம் வெல்லும் மக்கள் நல அறக்கட்டளையின் பூலோகப்பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில் ஆவல்நத்தம் லட்சுமணன், தமிழ்நாடு காமராஜ் பேரவையின் நாஞ்சில் குமார், மக்கள் நீதிமய்யம் ராதாகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முகாமை கண் மருத்துவர் ராஜேஸ்வரி மற்றும் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தூரப் பார்வை, கிட்டப் பார்வை, கண் புரை, கண்ணில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் மேல் சிகிச்சைக்காக 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu