உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரும்.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..

உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரும்.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..
X

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திருநங்கைகளுடன் பொங்கல் கொண்டாடினார்.

அதிமுக தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சாதகமான தீர்ப்பு வரும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சந்திப்புநகரில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருநங்கை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திருநங்கைகளுடன் சமத்துவ பொங்கல் வைத்து 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு பொங்கல் பரிசு பொருளை வழங்கினார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆளுநர் உரை என்பது அந்த ஆண்டு தொடக்கத்தில் மக்களுக்காக அரசு செய்யும் திட்டங்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வு. ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான மாறுபட்ட கருத்துகள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, காலத்தில் இருந்து உள்ளன. அந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் என்றால் ஆளுநர் உரை வரும்போது அதற்கு முன்கூட்டியே அரசு ஆளுநரிடம் கூறி இருந்தால் அது பொருத்தமாக இருக்கும். அதற்கான முழு பொறுப்பும் அரசு தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சி என்றால் ஆளுநர் உரைக்கு பிந்திய விவாதங்களில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை தெரியப்படுத்த முடியும். ஆனால் முந்தைய நிகழ்வு என்பது அது ஆளுங்கட்சிக்கு தான் முழு பொறுப்பு. ஆளுநர் கருத்தில் முரண்பட்ட கருத்து தெரிந்திருந்தால் அது முன்பாகவே அதை தெரிந்திருந்து அதை அவரிடம் கொண்டு சேர்த்தால் அது தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது எங்கள் கருத்து.

ஆளுநரும், மற்றும் தமிழக அரசின் கருத்துகள் முரண்பாடுகள் களையப்பட்டால் அது நாட்டுக்கு நல்லது. தமிழகத்துக்கு நன்மை பிறக்கும். அதிமுக தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் இன்னும் தாமதமாவதற்கு வாய்ப்பில்லை. விவாதங்கள் முடிந்து தீர்ப்புகள் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம்.

அந்த தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கும். அதிகமான எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் அனைத்து பிரதிநிதிகளும் எங்கே இருக்கின்றார்களோ அதற்கு ஏதுவாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil