தொண்டரும் முதல்வராக முடியும் என நிரூபித்துக் காட்டிய இயக்கம் அதிமுக.. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேச்சு...

தொண்டரும் முதல்வராக முடியும் என நிரூபித்துக் காட்டிய இயக்கம் அதிமுக.. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேச்சு...
X

புதியம்புத்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

தொண்டர் ஒருவர் முதல்வராக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய இயக்கம் அதிமுக என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக சார்பில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது‌.

இந்தக் கூட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான மோகன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசியதாவது:

பொய்யான வாக்குறுதிகளையும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பொய்யான வாக்குறுதி கொடுத்து கோபுரத்திற்கு போனாலும் நாளைக்கு குப்பைமேட்டிற்கு போவது உறுதி. தமிழ் என்று பிழைப்புக்காக சொல்வது திமுக. ஆனால், தமிழ் என்று உணர்வோடு நிற்பது அதிமுக.

திமுக 500-க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, ஸ்டாலின்தால் வராரு விடியல் தர போறாரு எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள். வாரிசு படத்திற்கு வாரிசால் பிரச்னை வந்தது. அந்த வாரிசுக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் வாரிசுகளுக்கு இடமில்லை. தொண்டர்களுக்கு தான் பதவி. ஒரு தொண்டரால் முதல்வராக முடியும் என்பபதை நிரூபித்துக் காட்டிய இயக்கம் அதிமுக என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

கூட்டத்தில், அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் பட்டணம் நைனா முகமது, ஆண்டிப்பட்டி உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாணவரணி துணை செயலாளர் பீமராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!