கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கையேந்தும் போராட்டம்
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுக்கையிட்டு துண்டை ஏந்தியவாறு கையேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன்களுக்கான தங்க நகைகளை திருப்பி தர வேண்டும், கடந்தாண்டு மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை 4000 ஆயிரம் இதுவரை வழங்கப்படமால் இருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் தற்பொழுது விவசாய பணிகள் தொடங்கபட உள்ளதால் உரங்கள் தட்டுப்பாடு இல்லமால் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், போலியான உரங்கள் விற்பனை செய்யபடுவதை தடுக்க வேண்டும், தரமான உரங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பயிர்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுக்கையிட்டு துண்டை ஏந்தியவாறு கையெந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணணிடம் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu