கலப்பு உரம் வாங்க வலியுறுத்தும் உரக்கடைகள் மீது விவசாயிகள் புகார்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் உரம் வாங்கும்போது ஒரு பாக்கெட் கலப்பு உரம் கட்டாயமாக வாங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பவதாகவும், இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய விவசாயிகள் தள்ளப்படுவதாகவும், அது போன்று விவசாயிகளை கட்டயபடுத்து உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கோட்டாட்சியரிம் அளித்த மனுவில்,
தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களான டிஏபி, காம்ப்ளக்ஸ், யூரியா, ஆகியவைகளுக்கு தட்டுப்பாடுகள் இருப்பது போன்று மாயையை ஏற்படுத்தி வருகின்றனர் ஆகையால் அனைத்து கடைகளிலும், வேளாண் கிடங்கிலும், கூட்டுறவு விவசாய வங்கிகளிலும், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், 2019-20க்கான பயிர் காப்பீடு நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு இன்று வரை வழங்கப்படாமல் உள்ளது.
வெள்ள நிவாரண நிதி தற்போதுவரை விவசாயிகளுககு கிடைக்கப் பெறவில்லை. ஆகையால் போர்க்கால அடிப்படையில் இதனை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீடு காலதாமதம் இல்லாமல் தற்போதைய விதைப்பு நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
அந்த அமைப்பின் தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் கோட்டாட்சியர் சங்கரநாரயணணிடம் தங்களது கோரிக்கை மனுவினையும் அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu