வீரமாமுனிவர் மணி மண்டபத்தை விரைவில் திறக்க முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்
கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில் கட்டப்பட்டுள்ள வீரமாமுனிவர் மணிமண்டபத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் தமிழக அரசு சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ் உரைநடையின் தந்தை என அழைக்கப்படும் வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு பல மாதம் காலம் ஆகியும் திறப்பு விழா காணப்படாத நிலை உள்ளது.
இதே போல் டாக்கோ வங்கி மூலமாக 1 கோடியே 68 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு திருமண மண்டபங்களையும் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கழுகுமலை சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட மக்காசோளம், வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆயிர கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்கா சோளம் சேதம் அடைந்தது உள்ளது. அந்தப் பயிர்களுக்கு உடனடியாக தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும். இல்லையென்றால் விவாசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டத்தை அ.தி.மு.க. நடத்தும்.
கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வரபட்ட திட்டங்களின் பணி நிறைவுற்ற போதிலும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் தி.மு.க. அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வீரமாமுனிவர் மணிமண்டபம் அமைக்க ஏற்பாடு செய்யபட்டு இடம் தேர்வு செய்யபட்டது. இந்நிலையில் கொரோனா வந்துவிட்டதால் அப்பணியை தொடங்க முடியவில்லை.
தற்போது தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பின்பு 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அவர் வாழ்ந்த காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் மணி மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு காலம் ஆகியும் இன்னும் திறக்கபட வில்லை. 4 முறை திறப்பு விழா தேதி முடிவு செய்யபட்டு இன்னும் திறக்கப்பட வில்லை என்பதால் விரைவில் திறக்க பட வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu