மாணவர்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க முன்னாள் டிஜிபி அறிவுரை

மாணவர்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க முன்னாள் டிஜிபி அறிவுரை
X

கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபு பேசினார்.

மாணவர்கள் தங்கள் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கினார்.

தமிழக டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திர பாபு பல்வேறு கல்வி நிலைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசி வருகிறார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டுதல், ஊக்கமளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைவர் அய்யனார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார் நிகழ்வில் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்று மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.


நாம் ஏன் கல்வி கற்க வேண்டும்" என்பது குறித்தும் " கல்வியை எளிமையாக எப்படி கற்க வேண்டும் என்பது குறித்தும்" கல்வி கற்பது சுகமே என்ற தலைப்பிலும் மாணவர்களுடன் அவர் உரையாடினார். மாணவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் சோர்வடையக்கூடாது நாம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நம்மை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் அதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் பள்ளி காலங்களில் எப்படி இருக்க வேண்டும் என சைலேந்திர பாபு எடுத்துரைத்தார்.

மேலும், மாணவர்களிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை அவர் பரிசாக வழங்கினார். முன்னதாக முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு உருவ படத்தை ஓவியமாக வரைந்த மாணவ மாணவிகளிடம் செல்பி எடுத்து கொண்டும் மாணவர்களுக்கு ஆட்டோகிராப்பும் வழங்கினர். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் குழு புகைபடமும் அவர் எடுத்து கொண்டார்.

இந்த நிகழ்வில், எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் மகாலட்சுமி, முதுநிலை ஆசிரியர் சுஜாதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்