எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முற்றுகை
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் தாலுகாவிற்குட்பட்ட சிதம்பராபுரத்தில் செல்வமோகன் என்பவர் அரசின் அனைத்துவிதமான அனுமதியும் பெற்று வரும் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது ஆலையின் பெயரில் முன்பு ஓம் என்ற எழுத்தை சேர்த்து சிறிய மாற்றம் செய்ய இருப்பதால் அதற்கு அனுமதி கேட்டு செல்வமோகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25.04.2023 விண்ணப்பம் செய்துள்ளார். இதையெடுத்து பெயர் மாற்றம் செய்யவதற்கு அனுமதி அளிப்பதற்காக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அந்த விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் கடந்த 40 நாள்களுக்கு மேலாகியும் தற்பொழுது வரை எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செல்வமோகன் அளித்த விண்ணப்பம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கமால் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வமோகன் பலமுறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதிலும் அவர்கள் சரியான பதில் அளிக்கமால் இருந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, செல்வமோகன் அளித்த விண்ணப்பத்தின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கமால் இருக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் தலைமையில் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் வட்டாட்சியர் மல்லிகாவிடம் அவர்கள் வழங்கினர்.
தொடர்ந்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சைனா லைட்டர், தீப்பெட்டி மூலப்பொருள்கள் விலை உயர்வு என தீப்பெட்டி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சிறிய பெயர் மாற்றம் செய்வதற்கு எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 நாள்களுக்கு மேலாக அலைக்கழித்து வருகின்றனர்.
தொழில் வளம் மேம்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும், ஆலையின் பெயரில் சிறிய மாற்றம் செய்யும் விண்ணப்பத்தினை பரீசிலனை செய்யமால் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது குறித்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu