தகுதி உள்ள விடுபட்ட மகளிர்க்கு உரிமைத் தொகை ரூ.1000 நிச்சயமாக வழங்கப்படும் - கனிமொழி எம்பி

தகுதி உள்ள விடுபட்ட மகளிர்க்கு உரிமைத் தொகை  ரூ.1000 நிச்சயமாக வழங்கப்படும் - கனிமொழி எம்பி
X

பட விளக்கம்: கோவில்பட்டி பகுதியில் கனிமொழி கருணாநிதி எம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த போது எடுத்த படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதிகளில் வெற்றி பெற்றதற்கு கனிமொழி கருணாநிதி நன்றி கூறினார்

மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்கு: தகுதியானவர்களுக்கு 1000 ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மீண்டும் போட்டியிட்டு 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி ஆகியோர் போட்டியிட்டனர். கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். எனவே, வாக்களித்த பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று இரவு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வானரமுட்டி கிராமத்தில் நன்றி அறிவிப்பு நிகழ்வு தொடங்கி, கழுகுமலை, வேலாயுதபுரம், செட்டிகுறிச்சி, அய்யனாரூத்து, கயத்தாறு, அகிலாண்டபுரம், கடம்பூர், காமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, மக்கள் அளித்த மனுக்களையும் கனிமொழி எம்.பி பெற்றுக் கொண்டார்.

கனிமொழி எம்.பி பேசியது: உங்களுடைய மக்களவைப் பிரதிநிதியாக பணியாற்றக்கூடிய ஒரு வாய்ப்பை இரண்டாவது முறையாக எனக்கு வழங்கியதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 நாள் வேலை சரியாக வரவில்லை என்று கூறினீர்கள், அதற்கு என்ன தீர்வு என்றால் இருக்கக்கூடிய ஒன்றிய பாஜக ஆட்சி சரியாகப் பணம் ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

ஒன்றிய அரசு நமக்குத் தரவேண்டிய பணத்தைக் கூட தருவதில்லை. மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்கு, பெறுவதற்குத் தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயம் 1000 ரூபாய் கிடைக்கும் என்று கூறினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil