''திமுக ஒரு நாடக கம்பெனி, அதனை உடைப்போம்'' - கோவில்பட்டியில் அண்ணாமலை பேச்சு
திமுக ஒரு நாடக கம்பெனி - அதனை உடைப்போம் - கோவில்பட்டியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சி பகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து நிர்வாகிகள் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக வருகை புரிந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பார்வைத்திறன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் போத்தீஸ் ராமமூர்த்தி, பாஜக நகர தலைவர் பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் விழா மேடையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த 8 ஆண்டுகளாக களத்தினை தயார் படுத்தி பாஜக வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளோம் பாஜக ஆட்சி காலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. அதே போல் தொடரட்டும் நல்லாட்சி என்று திமுக கூறுகின்றனர். ஆனால் 8 மாதத்தில் மக்கள் பாதிக்க தான் பெற்றுள்ளனர். எல்லாத்திலும் கமிஷன் தான்.
பாஜக ஆட்சியின் போது மத்திய அரசின் முத்ரா திட்டம் ஜல்சக்தி குடிநீர் திட்டம் மூலம் லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் பயனடைந்துள்ளனர 8 வருடத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளது. கறைபடிபாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் பாஜகவினர். திமுக என்று தமிழகத்தினை விட்டு போகிறதோ என்று தான் நல்லாட்சி
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார்கள். இதே குறித்து மக்கள் கேட்பார்கள் என்பதால் முதல்வர் காணொலி காட்சி மூலமாக பிரச்சாரம் செய்கிறார். உதயநிதி ஸ்டாலின் துபாயில் உள்ளார்.
நீட் டிராமா கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவர்களின் ரீல் அந்து போச்சு . ஏழை எளிய மக்கள் நீட் தேர்வினால் அதிகம் பயன்பெற்றுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் தான் தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் கைது செய்யப்படுகின்றனர். இதில் சதி உள்ளது.
திமுக ஒரு நாடக கம்பெனி - அதனை உடைப்போம் உள்ளாட்சியில் விழும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு விழும் வாக்குகள்..என்று நிர்வாகிகள் மத்தியில் பேசினார் பின்னர் கோவில்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu