கோவில்பட்டியில் வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டியில் வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்
X

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா குறித்த சங்கத்தின் வட்டக் கிளை ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் நிகழ்ச்சியின்போது வட்டக் கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. வட்டக்கிளை தலைவராக செந்தில்குமார், வட்ட செயலாளராக அருண்குமார், பொருளாளராக ராஜசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோல, வட்டத்துணை தலைவராக சங்கரன், வட்ட இணை செயலாளராக ஜெயலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக முத்து கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர் வைரவிழா வட்டக் கிளை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் அருண்குமார் வரவேற்புரை ஆற்றினார். வைரவிழா மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் சுவாமிநாதன் உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ஞானராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ராஜ்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் உமாதேவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செந்தூர் ராஜன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின்போது, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ராஜ்குமார் மாநாட்டு நிதியாக 5000 ரூபாய் வழங்கினார். ‌அதன் பின்னர் கோவில்பட்டி வட்டத்தின் மண்டல துணை வட்டாட்சியர் செந்தில் முருகன் ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை வழங்கினார். நிகழ்ச்சி நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து கண்ணன் நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!