இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் போராட்டம்

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் போராட்டம்
X

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் போராட்டம்

இலவச வீட்டுமனைப்பட்ட வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருந்து வரும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக்கழகம் மற்றும் 5வது தூண் நிறுவனர் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர், தங்களது கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் சங்கரநாரயணனிடம் அளித்தனர். இதில் ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அனைத்து ரத்த தானக் கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், ராஜேஷ்கண்ணன், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் தாவீதுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!