கோவில்பட்டி அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிக்கை

கோவில்பட்டி அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிக்கை
X

மனு அளித்த ரத்ததானக் கழகத்தினர்.

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அனைத்து ரத்ததானக் கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக, மாவீரன் பகத்சிங் ரத்ததானக் கழக நிறுவனர் காளிதாஸ் தலைமையில், ரத்ததானக் குழுவினர், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் அளித்த மனுவின் விவரம்:

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாகவுள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சி.டி.ஸ்கேன் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் வேலைநேரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை மனு அளித்தும், எவ்வித பலனும் கிடைக்கவில்லை. எனவே, இக்கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 16ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!