கோவில்பட்டி பகுதி தீப்பெட்டி தொழிலாளர்களிடம் ஊதியம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்

தீப்பெட்டி தொழிலாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்த அதிகாரிகள்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி உற்பத்தி ஆலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கோவில்பட்டியில் உள்ள தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், தீப்பெட்டி தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யும் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ், பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர், தொழிலாளர் உதவி ஆணையர் (தூத்துக்குடி அமலாக்கம்) திருவள்ளுவன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் நூர்முகமது, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் தேவதாஸ் வரவேற்றார்.
தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் ராஜவேல், இணைச் செயலாளர் வரதராஜன், சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், தொழிலதிபர்கள் கோபால்சாமி, ராஜேஷ் மற்றும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட தீப்பெட்டி தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மாடசாமி, மகாலட்சுமி, ஜீவானந்தம், நூர் முகம்மது, லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் நன்றி கூறினார்.
தொடர்ந்து கோவில்பட்டி மற்றும் திருவேங்கடம் பகுதிகளில் உள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கு நேரடியாகச் சென்ற அதிகாரிகள் குழுவினர் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் ஊதியம் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu