தலைவரை நீக்க மண்ணெண்ணெய் கேனுடன் காங்கிரசார் போராட்டம்; கோவில்பட்டியில் பரபரப்பு

தலைவரை நீக்க மண்ணெண்ணெய் கேனுடன் காங்கிரசார் போராட்டம்; கோவில்பட்டியில் பரபரப்பு
X

மண்ணெண்ணெய் கேனுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் காங்கிரசார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவரை நீக்கக்கோரி காேவில்பட்டி காங்கிரசார் மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ரத்து செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி காங்கிராசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் கோவில்பட்டி காந்திமண்டபத்தில் நடந்தது. அதில், கோவில்பட்டி நகர தலைவர், கோவில்பட்டி, கயத்தார் வட்டார தலைவர்கள் பதவி நீக்கத்தினை கண்டித்தும், நேரு, இந்திரகாந்தி படத்தினை போடமால் தவிர்க்கும் மாவட்ட தலைவர் காமராஜை கண்டித்தும், சாதி மற்றும் பணத்தின் அடிப்படையில் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்ம் நடந்தது.

மேலும், இதனை ரத்து செய்வது மட்டுமின்றி, ராஜீவ்காந்தி ஆதரவாளர்களை நீக்கிய மாவட்ட தலைவர் காமராஜை அப்பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி அக்கட்சியின் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தங்களது கோரிக்கைகயை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் காந்தி சிலை முன்பு தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி மண்ணெணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மண்ணெண்ணெய் கேனை போலீசார் பறித்த காரணத்தினால் இரு தரப்புக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. போலீசாரிடம் இருந்த மண்ணெண்ணெயை கேனை பறித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது போராட்டத்தினை தொடர்ந்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவர் திருப்பதி ராஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் குறித்து கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!