கொள்முதல் செய்த உளுந்துக்கு பணம் தர மறுக்கும் நிறுவனத்தைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
கொள்முதல் செய்த உளுந்துக்கு பணம் தர மறுக்கும் நிறுவனத்தைக் கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனர்
விவசாயிகளிடம் இருந்து பொருள்களை கொள்முதல் செய்து, அவர்களுக்கு நியமான விலை கிடைக்க செய்வது, தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, விவசாயிகளுக்கு தரமான விவசாய இடு பொருள்கள் கிடைப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்யும் உளுந்து, பாசி உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்து அதiனை தரம்பிரித்து, பட்டை தீட்டி வெளியில் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் கூட்டு முயற்சியாக இணைந்து செயல்படும் இந்த அமைப்பின் வளர்ச்சி கருதி அரசும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக ரூ.60 லட்சம் வரை நிதி உதவி செய்துள்ளது.
இந்த உதவியை பெற்று உளுந்து,பாசி உள்ளிட்ட பயிர்களை தரம் பிரித்து விற்பனை செய்யவதற்கான இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்கள் கோவில்பட்டி அருகேயுள்ள சித்திரம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடம்பூர் அருகேயுள்ள மலைப்பட்டி கிராமத்தினை சேர்ந்த விவசாயி குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் இருவரும் விவசாயம் செய்து மட்டுமின்றி, அப்பகுதி விவசாயிகளிடம் இருந்து உளுந்து, பாசி ஆகியவற்றை கொள்முதல் செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், எம்.ஜி.குருசாமி காட்டன் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினர் கடந்த 2019 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஆண்டு அக்டோபார் மாதம் வரை ரூ 42 லட்ச ரூபாய் வரை உளுந்து கொள்முதல் செய்துள்ளனர். இதில் சுமார் 20 லட்சம் வரை பல்வேறு கட்டங்களாக பணம் வழங்கியுள்ளனர்.
இன்னும், மீதி 21 லட்சம் வரை பணம் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை, குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் இருவரும் மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் மற்றும் அவர்களிடம் கொள்முதல் செய்த அந்நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தரமால் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டுள்ள ராஜகோபால் கூறுகையில் தங்கள் பகுதியில் விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம், மொத்த வியாபாரிகள் 2 மாதத்தில் பணத்தை கொடுத்துவிடுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் தான், மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிர்வாகிகள் தங்களிடம் உளுந்து கொள்முதல் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். நாங்களும் விவசாயிகள் எல்லாம் ஒருங்கிணைந்து சங்கம் அமைத்து செயல்படுவதால் உளுந்து கொடுத்தோம், 42 லட்சம் ரூபாய்க்கு கொடுத்து இருந்தோம், பல கட்டமாக 20 லட்சரூபாய் கொடுத்துள்ளனர்.
ஆனால், மீதி தொகையை தரமால் இழுத்தடித்து வருகின்றனர். நிர்வாக மேலாளர் சுப்புராஜை கேட்டால் இயக்குநர் கந்தசாமியை கேட்க சொல்கிறார். தினமும் வந்து பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றுத்துடன் செல்வதாகவும், தற்பொழுது விவசாய பணிகள் தொடங்கியுள்ளதால் அதற்கு செலவு செய்வதற்காக தங்களிடம் உளுந்து விற்பனை செய்தவர்கள் பணம் கேட்டு வருவதாகவும், மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினர் பணம் தரவில்லை என்றால் கம்பெனி முன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்கிறார்.
இ து குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் துணை தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு உளுந்தினை தலையில் சுமந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், காங்கிரஸ் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் மகேஷ்குமார், கோவில்பட்டி நகர தலைவர் சண்முகராஜ், கயத்தார் ஒன்றிய தலைவர் செல்லத்துரை, சேவா தள மாவட்ட தலைவர் சக்திவிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து; கோட்டாட்சியர் சங்கரநாரயணணிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்னை தொடர்பாக அந்த நிறுவனத்திடம் கேட்ட போது மானாவாரி உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிர்வாக இயக்குநர்கள் கூட்டம் நடைபெற்றதாகவும், ராஜகோபாலுக்கு வழங்க வேண்டிய பணம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu