பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வு: மாட்டு வண்டியில் வந்து கோவில்பட்டியில் காங்கிரஸார் போராட்டம்

பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வு: மாட்டு வண்டியில்  வந்து கோவில்பட்டியில் காங்கிரஸார் போராட்டம்
X
பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வினை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் சமையல் கேஸ்வுடன் ஊர்வலமாக சென்று சாலைப்புதூரில் உள்ள பெட்ரோல் பல்க் முன்பு கண்டன ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.

பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் பயணித்து காங்கிரஸார் கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வினை கண்டித்தும், மத்தியரசு உடனடியாக விலை உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் பங்க் முன்பு சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் மாட்டு வண்டியில் சமையல் கேஸ் சிலிண்டருடன் ஊர்வலமாக சென்று சாலைப்புதூரில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு திரண்டு நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக்கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் பெட்ரோல் பல்கில் பெட்ரோல்,டீசல் போட வந்த வாகனஓ ட்டிகளிடம் விலை உயர்வினை கண்டித்து கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.

இதை போன்று, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் சண்முகராஜ் சார்பில் ரயில்வே நிலையம் சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொது மக்களிடம் கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!