கோவில்பட்டியில் பள்ளி மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்
கோவில்பட்டி அரசு மருத்துவமனை. (கோப்பு படம்).
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள களப்பான்குளத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் கழுகுமலையில் உள்ள ஆர்.சி.சூசை மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வழக்கம் போல சென்றுள்ளார். அப்போது வகுப்பில் இருந்த சமூகவியல் ஆசிரியை ரெமிலா (49), மாணவர்களிடம் வீட்டுப்பாடம் எழுதியதற்கான நோட்டை கேட்டுள்ளார். அனைத்து மாணவர்களும் தங்கள் செய்த வீட்டுபாடங்களை ஆசிரியையிடம் காண்ப்பித்து கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பிரார்த்தனைக்கு சென்றுள்ளனர். பிரார்த்தனை முடிந்து வந்ததும் 13 வயது மாணவரிடம் வீட்டுப்பாடம் செய்யாமல் பொய் சொல்கிறாயா? என்றுக் கூறி ஆசிரியை கம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
கை மற்றும் முதுகில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மாணவரின் தாய் கவிதாவுக்கு, ஆசிரியை ரெமிலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மகன் ஹோம் ஒர்க் செய்யவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, காயமடைந்த மாணவரின் தாய் கவிதா பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தது மட்டுமின்றி , கழுகுமலை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
காயமடைந்த மாணவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் தாய் கவிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை ரெமிலா மீது கழுகுமலை காவல்துறையினர் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu