கோவில்பட்டியில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலி

கோவில்பட்டியில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலி
X

மின்னல் தாக்கியதில் பலியான கல்லூரி மாணவி ராஜேஸ்வரி.

கோவில்பட்டி அருகே சாலை புதூரில் வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட சாலை புதூர் பகுதியை சேர்ந்த ராமர் என்பவரது மகள் ராஜேஸ்வரி (21). தனியார் கல்லூரியில் பயின்று வந்தார்.

இன்று மாலை லேசான சாரல் மழை பெய்தததும், வீட்டின் மாடியில் காய வைத்திருந்த துணிகளை எடுக்க ராஜேஸ்வரி மாடிக்கு சென்றுள்ளார். துணிகளை அவர் எடுத்து கொண்டு இருந்த போது மின்னல் தாக்கியதில் ராஜேஸ்வரி பரிதபமாக உயிர் இழந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்தும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு மாடியில் காய வைத்திருந்த துணியை எடுக்க சென்ற கல்லூரி மாணவி மின்னல் தாக்கி உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்