"பேஸ்புக் காதல்" பெண்குரலில் ஏமாற்றி தகாத செயல்: வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் -வாலிபர் கொலை

பேஸ்புக் காதல் பெண்குரலில் ஏமாற்றி தகாத செயல்: வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் -வாலிபர் கொலை
X

கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் முருகன்

2 ஆண்டுகளாக காதலிப்பதாக பெண் குரலில் ஏமாற்றியது மட்டுமின்றி, ஓரின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியுள்ளதால் ஆத்திரம்.

கோவில்பட்டி அருகே 2 ஆண்டுகளாக காதலிப்பதாக பெண் குரலில் ஏமாற்றியது மட்டுமின்றி, ஓரின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய மேலஈரால் முருகன் என்பவரை மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காஞ்சிபுரத்தினை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கரந்தை சுடுகாட்டு அருகில் உள்ள காட்டு பகுதியில் கடந்த 15ந்தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக மாசார்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கொலை செய்யப்பட்ட முருகன்

இதையெடுத்து போலீசார் விரைந்து சென்று உடலைக்கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த ஆண் சடலம் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்து மேலஈரால் கிராமத்தினை சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன் (28) என்பது தெரியவந்தது. முருகன் சடலம் அருகில் கிடந்த மது பாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகிய கிடந்த நிலையில், முருகன் தலையில் அடிபட்டு இருந்த காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதிய போலீசார், சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பெயரில், விளாத்திகுளம் டி.எஸ்.பி.பிரகாஷ் மேற்பார்வையில் மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா, உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை தொடங்கினார்.

எட்டயபுரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்ததில், சடலமாக கிடந்த முருகனுடன் ஒரு நபர் சென்றது தெரியவந்தது. மேலும் முருகன் செல்போனை கைப்பற்றி அதனை ஆய்வு செய்த போது, ஒரு நம்பரில் இருந்து முருகன் போனுக்கு அடிக்கடி போன் வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த போன் நம்பரை போலீசார் ஆய்வு செய்த போது அந்த நம்பர் காஞ்சிபுரம் மாவட்ட தாமல் பகுதியை சேர்ந்த மாயண்டி மகன் முருகன் (24) என்பது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் காஞ்சிபுரம் முருகன் குறித்து விசாரணை நடத்த தொடங்கினார். இந்த நிலையில் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து முருகன், சம்பவத்தின் போது விட்டு சென்ற மணிபார்சினை எடுக்க வந்த போது போலீசார் அவரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சடலமாக கிடந்த முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் ஏன் கொலை செய்தான் என்று அவர் கூறிய காரணத்தினை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

கொலை செய்யப்பட்ட முருகன், காஞ்சிபுரம் முருகனிடம் பேஸ்புக்கில் தான் ஒரு பெண் என்றும், தனது பெயர் அமுதா என்று கூறி பழகியுள்ளார். பெண் என்று நம்பி காஞ்சிபுரம் முருகனும் பேசியுள்ளார். மேலும் 2 ஆண்டுகளாக இருவரும் பேஸ்புக்கில் காதலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 14ந்தேதி காதலர் தினத்தில் காஞ்சிபுரம் முருகன், பேஸ்புக்கில் பழகிய அமுதாவை பார்க்க வந்த போது, அது பெண் இல்லை என்றும், கொலை செய்யப்பட்ட முருகன் ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட முருகன், காஞ்சிபுரம் முருகனை கட்டயப்படுத்தி ஓரினச்சேர்க்கை செய்ததது மட்டுமின்றி, அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். அந்த வீடியோவினை அழிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 14ந்தேதி எட்டயபுரத்திற்கு வந்த காஞ்சிபுரம் முருகன், கொலை செய்யப்பட்ட முருகனை அழைத்து கொண்டு மேலக்கரந்தை பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட முருகன் குடித்த மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் காஞ்சிபுரம் முருகன்.

கொலை செய்யப்பட்ட முருகன் மயக்கியதும், அவர் தலையில் கல்லை போட்டு விட்டு காஞ்சிபுரம் முருகன் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!