கோவில்பட்டியில் செய்தி தாள்களை இல்லங்களில் சேர்ப்போர் தினம் கொண்டாட்டம்

கோவில்பட்டியில் செய்தி தாள்களை இல்லங்களில் சேர்ப்போர் தினம் கொண்டாட்டம்
X

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்போர் கௌரவிக்கப்பட்டனர்.

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் செப்டம்பர் 4 ஆம் தேதி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பத்திரிகை வாசிப்பு அவசியம் என்ற போதிலும் அச்சிடப்படும் பத்திரிகைகளை வீடுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஏராளமானோர் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகள் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்த்து அதன் மூலம் உயர் கல்வி கற்று உயர் பதவிகளை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து மேடைகளிலும் தான் செய்தித்தாள்களை சைக்கிளில் சென்று வீடுகளுக்கு விநியோகம் செய்ததை தவறாமல் அப்துல்கலாம் கூறி வந்தார்.


இந்நிலையில், செய்தித்தாள்களை இல்லங்களில் கொண்டு சேர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பேப்பர் பாய் என்ற பெயரில் தனியாக ஒரு தினம் கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கோவில்பட்டி வி.எஸ்.எஸ் சவுண்ட் சர்வீஸ் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின்போது, செய்திதாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை பாராட்டி சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.

ரோட்டரி சங்க செயலாளர் சரவணன்,பப்ளிக் இமேஜ் தலைவர் முத்து முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்து செல்வம் கலந்துகொண்டு தினசரி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்க்கும் பாலமுருகன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!