தண்ணீர் எடுத்து கொடுத்து வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தண்ணீர் எடுத்து கொடுத்து வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சைக்கிளில் தண்ணீர் எடுத்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் ஈடுபட்டார்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆர் நம்பி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட விஜயாபுரி, திட்டங்குளம், நகராட்சிக்கு உள்பட்ட எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி அருகே, வக்கீல் தெரு, பாரதி நகர், ராஜீவ் நகர், மந்தித்தோப்பு, கம்மவார் திருமண மண்டபம், வ.உ.சி நகர், லட்சுமி மில் பழைய காலனி, புது காலனி, இனாம்மணியாச்சி, இந்திரா நகர், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே, ரயில் நிலையம் அருகே, கடலையூர் சாலை, பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி – கோவில்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்திந்திய எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்திற்கு இடையே தெற்கு திட்டங்குளத்தில் சைக்கிளில் தண்ணீர் எடுத்து கொடுத்தும், சாலையோரத்தில் உள்ள இளநீர் விற்பனை கடைக்குச் சென்ற அவர், கடையின் முன் திரண்டிருந்த பொதுமக்களுக்கு இளநீரை வெட்டி கொடுத்து வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story