கோவில்பட்டி மாட்டு வண்டிப் போட்டியில் சீறி பாயந்த காளைகள்

கோவில்பட்டி மாட்டு வண்டிப் போட்டியில் சீறி பாயந்த காளைகள்
X

மாட்டு வண்டிப் போட்டியில் சீறிபாய்ந்து சென்ற காளைகள்.

கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் போட்டிகள் நடைபெற்றன.

தமிழக வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்று மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிப் போட்டிகளும் முக்கிய பங்கு வகிக்கன்றன. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் விழாக்கள், தலைவர்களின் பிறந்தநாள்களில் மாட்டு வண்டிப் போட்டியும், குதிரை வண்டி போட்டியும் நடத்தப்படுவது உண்டு. இதை ஆண்டுதோறும் நடத்துவதை விழாக் குழுவினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கிழவிபட்டியில் ஸ்ரீ மலை அலங்காரியம்மன், புது அம்மன், துர்க்கையம்மன், மலையடி கருப்பசாமி திருக்கோவில் ஆனி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சின்ன மாடு, பூஞ்சிட்டு என்று இரண்டு வகையில் போட்டிகள் நடைபெற்றது. 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டியில் 10 மாட்டு வண்டிகளும், 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 11 மாட்டுவண்டிகளும் பங்கேற்றன.

இந்தப் போட்டியில் காளைகள் சீறிபாய்ந்து சென்று எல்லையை தொட்டு சென்று பரிசுகளை தட்டிச்சென்றன. சீறிபாய்ந்து சென்ற காளைகளை மக்கள் சாலையின் இருபுறமும் நின்றபடி பார்த்து ரசித்தனர். சிறிய மாட்டு வண்டி போட்டியில் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த சுப்பையா மாட்டு வண்டி முதலிடத்தினையும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரஜோதி மாட்டு வண்டியும் முதலிடம் பெற்றன.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளும், சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்தப் போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!