கோவில்பட்டியில் கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி
மாட்டுவண்டி எல்கை போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளவேலங்கால் கிராமத்தில் கருப்பசாமி தர்மசாஸ்தா திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புளியம்பட்டி கடம்பூர் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில் நடு மாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளில் 10-க்கும் மாட்டு வண்டிகள் பங்கேற்றன. நடு மாட்டு வண்டிக்கு எல்கையாக 8 கிலோ மீட்டர் தூரமும், சின்ன மாட்டு வண்டிக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் எல்லை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்தப் பந்தயத்தில் கலந்து கொண்டு முதல் பரிசை சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த மெடிக்கல் விஜயகுமார் என்பவரது மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசாக குமரெட்டியாபுரம் பகுதியைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரது மாட்டுவண்டியும் மூன்றாவது பரிசு வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது மாட்டுவண்டியும் பெற்றன.
சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் என்பவரது மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசாக கயத்தார் நம்பிராஜன் மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசாக சிங்கிலிபட்டியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் மாட்டு வண்டியும் பெற்றன.
மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாட்டின் உரிமையாளருக்கும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருனமான கடம்பூர் ராஜூ டிவி மற்றும் ரொக்க பணம் உள்ளிட்டவைகளை பரிசுகளாக வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, கடம்பூர் விஜி, கோபி, முருகன் ஊர் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu