பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தொடர்கிறது: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி  தொடர்கிறது: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
X

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்தார்.

பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தொடர்கிறது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உள்பட்ட சிந்தாமணி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு அடிக்கல் நாட்டும் பணியை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து கிளைச் செயலாளர் பாலமுருகன் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அம்மா உணவங்களை மூடும் போக்கினை தமிழக அரசு கை விட வேண்டும். இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு அ.தி.மு.க .கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மகளிருக்கு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட எல்லா திட்டங்களை எல்லாம் தி.மு.க. மூடு விழா நடத்தி வருகிறது.

தேவர் மகன் திரைப்படம் வெளியான போது பல்வேறு விமர்சனங்களை வந்தாலும் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. தேவர் மகனில் கருந்து வேறுபாடுகள் இருந்திருந்தால் மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவை தந்திருக்க மாட்டார்கள் ஜனரஞ்கமான படமாக அமைந்தது.ஜாதி மோதல்களை ஊக்குவிப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கதக்கது.

அத்தகைய கருத்துகள் இருப்பதால் தான் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அவ்வாறு இருந்தால் படக்குழு ஆராய்ந்து அதனை நீக்க வேண்டும் இதற்காக வெளியான பழைய படங்களை ஒப்பிட்டு பேசுவது தீர்வாகாது.

மாமன்னன் திரைபடத்தில் ஜாதி மோதலை உருவாக்கும் கருத்துக்கள் இருந்தால் படக்குழு அதனை நீக்க வேண்டும். அ.தி.மு.க. இன்றைக்கு வரைக்கும் பா.ஜ.க. கூட்டணியில் தான் தொடர்கிறது. சிறந்த பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் முரண்பாடு ஏதுமில்லை. முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் அது குறித்து பா.ஜ.க. தலைமை சொன்னால் மட்டும் தான் அது சரியான கருத்தாக இருக்கும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!