கோவில்பட்டியில் நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

Kovilpatti Accident News Today
Kovilpatti Accident News Today-தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த கூசாலிபட்டி சேர்ந்தவர் அன்பரசு (26). இவரது நண்பர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த கேசவன் (22). இருவரும், குளிர்சாதன பொருட்கள் பழுதுநீக்கும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில், திருநெல்வேலிக்கு வேலைக்காக சென்ற இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் இன்று கோவில்பட்டி திரும்பிக் கொண்டிருந்தனராம்.
கோவில்பட்டி நோக்கி வரும் போது கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் விலக்கு பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அன்பரசுவும், கேசவனும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புத்தூர் காவல்துறையினர் விரைந்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து நாலாட்டின்புத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, விபத்தில் அன்பரசுவும், கேசவனும் இறந்த தகவல் கிடைத்ததும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் திரண்டனர்.
இறந்த அன்பரசு மற்றும் கேசவனின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுந்த சம்பவம் அங்கு இருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களது கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu