பாரதியார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

பாரதியார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை
X

எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் திருவுருவ சிலைக்கு அமைச்சர் பெ.கீதாஜீவன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி எட்டயபுரத்தில் அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் திருவுருவ சிலைக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், எட்டயபுரம் வட்டாட்சியர் அய்யப்பன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future