கோவில்பட்டியில் சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

கோவில்பட்டியில் சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
X

கோவில்பட்டியில் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு, கல்வி அளித்தலில் சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு, கல்வி அளித்தலில் சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி அளித்தல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிறப்பாக பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படுவது வழக்கம்.

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தை பராமரிப்பு பணிகளில் பல்லாயிரக்கணக்கான அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறந்த அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் கல்வி அளித்தலில் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் ஜேசிஐ அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசா பேகம் தலைமை வகித்தார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி ஜேசிஐ செயலாளர் சூர்யா அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி வட்டாரத்தில் லிங்கம்மாள் தேவி, மகேஸ்வரி, ராதா, காந்திமதி, மெர்சி, விஜயலட்சுமி ஆகியோருக்கும் கயத்தாறு வட்டாரத்தில் ஜோதிலட்சுமி, குரு லட்சுமி, கோமதி, ஆபிதா பானு, தமிழ்ச்செல்வி, கீதாலட்சுமி, விஜயலட்சுமி, கோமதி ஆகியோருக்கும் சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசினை கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் தீபன் ராஜ் வழங்கி பாராட்டி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், கோவில்பட்டி, கயத்தாறு வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் முத்துமாரி நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!