கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்!

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்!
X

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள செண்பகவல்லியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை அடுத்து நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனம் மற்றும் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கடந்த 6 ஆம் தேதி மிக வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருத்தேரோட்டத்தை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நான்கு ரத வீதிகளில் அம்மாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பத்தாம் திருவிழா நாளில் அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதலும், 11 ஆம் நாள் திருவிழா மதியம் அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழா நேற்று நடைபெற்றது இதனை முன்னிட்டு காலையில் திருவணந்தல் பூஜை விளா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. வாமி மாப்பிள்ளை அழைப்பு தொடர்ந்து பின்னர் கோயில் மண்டபத்திற்கு அம்பாள் சுவாமி மணக்கோலத்தில் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர், யாகசாலை பூஜைகள் கும்ப கலச பூஜை, சுந்தராஜ்பெருமாள் தாரை வார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யான வைபவமும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி யானை வாகனத்திலும் அம்பாள் பல்லக்கிலும் பட்டணம் பிரவேசம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!