கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா இன்று சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டர் சாலையில் அதிமுகவினர் அதன் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அதிமுக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைபோன்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
photoshop ai tool